Search This Blog

Wednesday 21 December 2011

karthik21ece


vafc gangs in kkeyanece


love feelings




காதல் தோல்வி


கவிதை எழுத வேண்டும் என்று நினைத்த என்னை
காதல் தோல்விக்கும் கவிதை எழுத செய்கிறாய்..
சரி விடு.. வெற்றி என்ன..? தோல்வி என்ன..?
இதுவும் நம் காதலுக்கு (..மன்னிக்கவும்..)
இதுவும் என் காதலுக்காகத் தானே..!!





"என்ன மேடம் எங்களுக்கு ஒதுக்கின தொகுதிகள்ல உங்க கட்சி வேட்பாளரை நிற்க வைக்கிறீங்க, இதுதான் கூட்டணி தர்மமா?" " 'வார்த்தைய கொட்டாதீங்க' எங்க ஆளுங்க நின்னா என்ன? தொகுதி இப்பவும் உங்களதுதான"










ஒருவன்: சிகரெட் புடிச்சா கேன்சர் வரும். மற்றொருவன்: இல்லையே நான் பத்து வருஷமா புடிக்கிறேன். எனக்குத் தெரியாதா? சிகரெட் புடிச்சா புகைதான் வரும்.












"அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன்!" "அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்."

jokes













"நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?" "ஒண்ணும் இல்லை சார்!" "அட ஆச்சரியமா இருக்கே!" "சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!"









டேய் மச்சி, நாளைக்கு சினிமாவுக்கு போறேன் வர்றியாடா...? முடிஞ்சா வர்றேன் மச்சி... படம் முடிஞ்சி ஏன்டா வர! படம் ஆரம்பிக்கு பொழுதே வா!







தாய்ப்பாசம்

அவள் ஓடிப்போனாள்...
அம்மாவும், அப்பாவும் கூடி
அழுதார்கள்
அப்போதும் கூட
'என்மகள்' என்று
தான் அம்மா சொன்னாள்.

Tuesday 20 December 2011



"அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது, ஏன்?" "ஏன்?" "அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்.."



"உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?" "தெரியல....." "பல் டாக்டருக்கு தான்." "எப்படி?" "அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே."


வட்டத்துக்குள் வாழ்க்கை


      வாழ்க்கை சலிப்பூட்டுகிறது
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
எத்தனை மனிதர்கள்
ஏதோ இருப்பது போலும்
ஒன்றுமே இல்லாதது போலும்
தோன்றுகிறது
தூரத்தில் கயிறுதானேயென்று
அலட்சியமாக வந்தால்
கிட்டத்தில் பாம்பாகிறது
துரோகக் கழுகு
என்னை வட்டமிடுகிறது
எங்கு போயினும்
மரண சர்ப்பம்
என்னைத் துரத்துகிறது
வாழ்க்கை வட்டம்
நிறைவுறும் போது
எனக்காக எதுவும்
மிச்சமிருக்காது
மாம்சம் சாம்பலாகும்
நினைவுகள் சூன்யமாகும்
இன்னார் இருந்தாரென்பதை
இவ்வுலகம்
சீக்கிரத்தில் மறந்து போகும்.



மொழி

தொடாமல் பேசுவது
காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான்
நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே
கசியும் அர்த்தங்களை
எந்த மொழி
பேசிவிடும்
                                                                                                       கார்த்திகேயன்